PMSYM ₹3000 Pension Scheme Tamil விளக்கம் | Sellur e-Sevai முழு வழிகாட்டல்
ஜப்பான் Caregiver Certificate Course
Tamil Nadu Skill Development Corporation மற்றும் Tamil Nadu Skill Development Mission மூலம் Japanese Caregiver Program என்ற சிறப்பு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மூலம் ஜப்பான் நாட்டில் Caregiver வேலை பெற தேவையான மொழி மற்றும் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.
📚 பாடநெறி என்ன?
இந்த Certificate Course மூலம் ஜப்பானிய மொழியின் அடிப்படை அறிவும், Caregiver பணிக்கான திறன்களும் கற்பிக்கப்படும்.
பயிற்சியில் கற்றுக்கொள்ளப்படும் முக்கிய விஷயங்கள்:
Hiragana மற்றும் Katakana எழுத்துகளை படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுக்கப்படும்
தினசரி பயன்பாட்டில் வரும் Basic Kanji எழுத்துக்களை அறிமுகப்படுத்தப்படும்
வாழ்த்து, எண்கள், நேரம் மற்றும் தினசரி செயல்பாடுகள் தொடர்பான சொற்கள் கற்றுக்கொடுக்கப்படும்
எளிய வாக்கியங்களை உருவாக்கி கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் பயிற்சி அளிக்கப்படும்
வேலை இடம் மற்றும் தினசரி வாழ்க்கையில் நடைபெறும் மெதுவான உரையாடல்களை புரிந்து கொள்ள பயிற்சி வழங்கப்படும்
🧑⚕️ தேர்வு
பயிற்சி முடிந்த பிறகு மாணவர்கள் JLPT / JFT / NAT-TEST போன்ற ஜப்பானிய மொழி தேர்வுகளை எழுத வேண்டும். இந்த தேர்வுகள் பொதுவாக சென்னை அல்லது பெங்களூரு நகரங்களில் நடத்தப்படும்.
📍 பயிற்சி நடைபெறும் இடம்
Komarapalayam (கோமாரபாளையம்)
🖥 பயிற்சி முறை
Offline Training
⏱ பயிற்சி காலம்
120 மணி நேரம்
59 வயசா? முதியோர் பென்சன் பதிவு பண்ணலையா? | Sellur e-Sevai
🎓 தகுதி
இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க:
குறைந்தது 12ம் வகுப்பு தேர்ச்சி இருக்க வேண்டும்
கீழ்க்கண்ட படிப்புகள் இருந்தால் முன்னுரிமை:
ANM
GDA
GNM
B.Sc Nursing
Caregiver தொடர்பான Short-Term Course
சம்பந்தப்பட்ட வேலை அனுபவம்
🌏 இந்த பயிற்சியின் நன்மைகள்
ஜப்பான் நாட்டில் Caregiver வேலை வாய்ப்பு பெற உதவும்
ஜப்பானிய மொழி திறன் மேம்படும்
வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்
நல்ல சம்பளத்தில் வேலை பெற வாய்ப்பு அதிகம்
📝 பதிவு செய்ய
🔗 Registration Link:
https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/5801
QR Code scan செய்தும் பதிவு செய்யலாம்.

Comments
Post a Comment